ஜேம்ஸ் பாண்டின் நோ டைம் டூ டை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஜேம்ஸ் பாண்ட்

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் உலக அளவில் திரையரங்குகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வரவு திரையரங்குகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். 

  • News18
  • Last Updated :
  • Share this:
ரசிகர்களின் காத்திருப்பு கடைசியில் முடிவுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நோ டைம் டூ டை திரைப்படம் செப்டம்பர் 28 வெளியாகிறது.

சினிமா சரித்திரத்தில் ஒரு கதாபாத்திரத்தை வைத்து அதிகம் எடுக்கப்பட்ட திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் படமாகதான் இருக்கும். இந்த மாதம் வெளியாக இருக்கும் நோ டைம் டூ டை ஜேம்ஸ் பாண்ட் சீரிஸில் 25 வது படம். இங்கிலாந்தின் ரகசிய உளவாளி என்ற இந்த கற்பனை கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஷான் கானரி, திமோத்தி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், இப்போது ஜேம்ஸ் பாண்டாக நடித்துவரும் டேனியல் க்ரேக்வரை பலர் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்துள்ளனர். அதில் டாப் ஷான் கானரி. அடுத்து டேனியல் க்ரேக், முரட்டுத்தனமான ஜேம்ஸ் பாண்டாக ஆக்ஷன் காட்சிகளில் அசத்துகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.நோ டைம் டூ டை படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சண்டைக் காட்சிகள் அந்தளவு சிறப்பாக இருந்தன. திரையரங்கில் மட்டுமே வெளியிடுவது என்பதற்காக காத்திருந்தவர்கள் இந்த மாதம் 28 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெறும் சூரிச் ஃபிலிம் பெஸ்டிவெலில் படத்தை வெளியிடுகின்றனர். மறுநாள் 29 ஆம் தேதி சுவிட்சர்லாந்த், பெல்ஜியம், தென்கொரியா நாடுகளில் படம் வெளியாகிறது.

Also read... நான் ஸ்டாப் 51 நாள்கள் - எதற்கும் துணிந்தவன் சாதனை அப்டேட்!30 ஆம் தேதி ஆஸ்திரியா, ஜெர்மனி, டென்மார்க், பிரெசில், யுகே, இத்தாலி உள்பட பல நாடுகளில் வெளியாகிறது. பல்கேரியா, ஜப்பான், ஸ்பெயின் உள்பட பல நாடுகளில் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் அக்டோபர் 8 வெளியாகும் என கூறப்படுகிறது. அன்றுதான் யுஎஸ்ஸிலும் படத்தை வெளியிடுகின்றனர்

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் உலக அளவில் திரையரங்குகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வரவு திரையரங்குகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்
Published by:Vinothini Aandisamy
First published: