Home /News /entertainment /

ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்டை தெரிவித்த ரஜினி!

ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்டை தெரிவித்த ரஜினி!

ஜெயிலர்

ஜெயிலர்

ஜெயிலர் படத்திற்காக ஹைத்ராபாத்தில் செட் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஜெயிலர் படப்பிடிப்பில் வரும் 15 அல்லது 22-ம் தேதி கலந்துகொள்வேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அண்ணாத்த படம் வெளியானது. அந்தப் படத்திற்கு இரு வேறு விமர்சனங்கள் கிடைத்தன.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தமானார். ஆனால் அவர் விஜயின் பீஸ்ட் படத்தில் பிஸியாக இருந்தார். அந்தப் படம் வெளியான பிறகு ஜெயிலர் படத்தின் கதை விவாத பணிகளை நெல்சன் தொடங்கினார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் செய்திகள் வெளியாகின. இதனால் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Also read... விருமன் படத்தின் இசை வேலைகள் நிறைவடந்துவிட்டது - யுவன் சங்கர் ராஜா

இந்த நிலையில் ஆளுநர் ரவியை மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் சந்தித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த போது ஜெயிலர் படம் குறித்த கேள்விக்கு வரும் 15 அல்லது 22-ம் தேதி படப்பிடிப்பில் கலந்துகொள்வேன் என தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக ஹைத்ராபாத்தில் செட் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Rajinikanth

அடுத்த செய்தி