Home /News /entertainment /

வெகு விரைவில் ஜெயிலர் பட ஷூட்டிங் ஆரம்பம்… ரஜினிகாந்த் பேட்டி

வெகு விரைவில் ஜெயிலர் பட ஷூட்டிங் ஆரம்பம்… ரஜினிகாந்த் பேட்டி

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சிரித்தபடியே ஷூட்டிங் தான் என்று ரஜினி கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வெகு விரைவில் தொடங்கும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

    அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் ஜெயிலர் படத்தை இயக்குகிறார். இதற்கான ப்ரி புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் கன்னட நட்சத்திரம் சிவக்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    ‘விருமன் திரைப்படத்தின் டைட்டில் பாடலை இளையராஜா பாடியுள்ளார்’ – நியூஸ் 18-க்கு நடிகர் கார்த்தி பேட்டி

    ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    டெல்லியில் பல்வேறு முக்கிய பிரபலங்களை சந்தித்த ரஜினிகாந்த் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அப்போது ஜெய்லர் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படுகிறது என்று கேட்ட கேள்விக்கு.

    இன்னும் சரியாக தெரியவில்லை விரைவில் தொடங்கவுள்ளது என்று ரஜினி பதில் அளித்தார்.

    டெல்லியில் என்.சி.சி. மாணவர்களுடன் உரையாடிய ரஜினிகாந்த்… முக்கிய பிரபலங்களுடன் சந்திப்பு

    அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சிரித்தபடியே ஷூட்டிங் தான் என்று கூறினார்.

    மேலும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு நான் நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.

    இன்னும் சில வாரங்களில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்த ஆண்டு கோடையில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி