ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலுக்கு நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தகுதி பெறும் என மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், இப்படம் இறுதி பரிந்துரை பட்டியலுக்குள் நுழையவில்லை.
நடிகர் சூர்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு - பார்வதி ஆகியோர் சந்தித்த பிரச்னைகளையும், அவர்களுக்கு நீதி வாங்கித் தந்த அப்போதைய வழக்கறிஞர் சந்துருவையும் மையப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டிருந்தது.
ஜெய் பீம்படத்தைப் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். அதே நேரத்தில் படம் சில சர்ச்சைகளையும் கிளப்பியது. அமேசான் பிரைம்வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் மொழி, மாநில எல்லைகளை கடந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் மக்கள் முன் ஜெய் பீம் திரையிடப்பட்டது.
And the nominees for Best Picture are... #Oscars pic.twitter.com/wKEWVMpqwl
— The Academy (@TheAcademy) February 8, 2022
சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் ஜெய் பீம் திரைப்படம் பெற்றது. குறிப்பாக IMDB ரேங்கிங்கிலும் ஜெய் பீம் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலிலும் ஜெய்பீம் இடம் பெற்றது. ஜெய் பீம் எப்படியும் சிறந்த படத்திற்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், இன்று வெளியாக இறுதிப் பட்டியலில் ஜெய் பீம் இடம்பெறவில்லை.
இதையும் படிங்க: கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு - மகான் குறித்து துருவ் விக்ரம்
Belfast, CODA, Don't Look Up, Drive My Car, Dune, King Richard, Licorice Pizza, Nightmare Alley, The Power of the Dog, West Side Story ஆகிய படங்கள் சிறந்த படத்திற்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஜெய் பீம் திரைப்படம் இறுதிப் பட்டியலுக்குள் நுழையாதது இந்திய ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Surya, Jai Bhim, Oscar Awards