ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஓடிடியில் 200-வது நாள்… புதிய போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜெய்பீம் படக்குழு

ஓடிடியில் 200-வது நாள்… புதிய போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜெய்பீம் படக்குழு

ஜெய்பீம் 200 வது நாளையொட்டி வெளியிடப்பட்ட போஸ்டர்

ஜெய்பீம் 200 வது நாளையொட்டி வெளியிடப்பட்ட போஸ்டர்

சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் ஜெய் பீம் திரைப்படம் பெற்றது. குறிப்பாக IMDB ரேங்கிங்கிலும் ஜெய் பீம் முன்னிலை பெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி 200 நாட்கள் ஆகியுள்ள நிலையில், வெற்றியை தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட்ஸ் கொண்டாடியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி, அமேசான் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார்.

சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு - பார்வதி ஆகியோர் சந்தித்த பிரச்னைகளையும், அவர்களுக்கு நீதி வாங்கித் தந்த அப்போதைய வழக்கறிஞர் சந்துருவையும் மையப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க - வருமானம் வருவது இங்கு, செலவு செய்வது அங்கு... அஜித்துக்கு ஆர்.கே.செல்வமணி வைத்த கோரிக்கை

ஜெய் பீம்படத்தைப் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் படம் சில சர்ச்சைகளையும் கிளப்பியது. அமேசான் பிரைம்வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் மொழி, மாநில எல்லைகளை கடந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் மக்கள் முன் ஜெய் பீம் திரையிடப்பட்டது.

இதையும் படிங்க - தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இன்னொரு நடிகை யார்?

சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் ஜெய் பீம் திரைப்படம் பெற்றது. குறிப்பாக IMDB ரேங்கிங்கிலும் ஜெய் பீம் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலிலும் ஜெய்பீம் இடம் பெற்ற நிலையில், இறுதிப் பட்டியலில் ஜெய்பீம் இடம் பெறவில்லை.

இந்நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெய்பீம் திரைப்படம் இன்றுடன் 200வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி, புதிய போஸ்டர்களை வெளியிட்டு படத்தில் பங்களிப்பு செய்தவர்களை பாராட்டி தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட்ஸ் வெற்றியை கொண்டாடியுள்ளது.

First published:

Tags: Jai Bhim