சுசீந்திரன், ஜெய் திரைப்படத்தின் பெயர் மாறியது...!
சுசீந்திரன், ஜெய் திரைப்படத்தின் பெயர் மாறியது...!
வீரபாண்டியபுரம்
சுசீந்திரனின் முந்தைய திரைப்படங்கள் போலவே எவ்வித சலசலப்பையும் ஈஸ்வரன் ஏற்படுத்தவில்லை. அப்படம் வெளியாகும் போதே ஜெய் நடிப்பில் ஒரு படத்தை ஏறக்குறைய சுசீந்திரன் முடித்திருந்தார்.
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் திரைப்படத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.
தொடர்ச்சியாக படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் சுசீந்திரன். அவரது இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளிவந்தது.
சுசீந்திரனின் முந்தைய திரைப்படங்கள் போலவே எவ்வித சலசலப்பையும் ஈஸ்வரன் ஏற்படுத்தவில்லை. அப்படம் வெளியாகும் போதே ஜெய் நடிப்பில் ஒரு படத்தை ஏறக்குறைய சுசீந்திரன் முடித்திருந்தார்.
சிவ சிவா என்று அதற்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்தப்படத்தின் இன்னொரு விசேஷம், நடிகர் ஜெய் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். விரைவில் சிவ சிவா வெளிவர உள்ளது.
இந்நிலையில் அப்படத்தின் பெயரை வீரபாண்டியபுரம் என மாற்றியுள்ளனர். இந்த மாற்றம் குறித்து விளக்கம் தெரிவித்து இருக்கும் சுசீந்திரன், சிவ சிவா திரைப்படத்தை பார்த்த தன்னுடைய நண்பர்கள் படத்தை வெகுவாக பாராட்டிய தாகவும், இது கிராமம் சார்ந்த திரைப்படம் என்பதால் மண் சார்ந்த கிராமத்து தலைப்பு இருந்தால் திரைப் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
அவர்களின் ஆலோசனையில் தனக்கு உடன்பாடு ஏற்பட்டதால் தயாரிப்பாளரின் சம்மதத்துடன் தனது உதவியாளர்களுடன் யோசித்து வீரபாண்டியபுரம் என புதிய பெயரை தேர்வு செய்ததாகவும் சுசீந்திரன் கூறியுள்ளார். விரைவில் படம் திரைக்கு வரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.