• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூர்யாவுக்கு மிக முக்கியமான படம் - பாராட்டுகளை குவிக்கும் ஜெய் பீம்!

சூர்யாவுக்கு மிக முக்கியமான படம் - பாராட்டுகளை குவிக்கும் ஜெய் பீம்!

ஜெய் பீம்

ஜெய் பீம்

பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யா மாற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

  • Share this:
    நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படத்தினை பிரபலங்களும், ரசிகர்களும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

    நடிகர் சூர்யா நடித்துள்ள 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யா மாற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

    அதில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.





    ஜெய் பீம் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    இந்த நேரத்தில் வந்த மிக சிறப்பான படம் என எடிட்டர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.



    அற்புதமான எழுத்து, பவர்ஹவுஸ் நடிப்பு, சிறந்த தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் இந்தப் படம் நமக்குள் கடத்தும் வலி நெஞ்சைப் பிசைகிறது. உண்மை இன்னும் மோசமானது என்பதை அறிவது மிகவும் வேதனையானது என நடிகை மிர்னா தெரிவித்துள்ளார்.



    நடிகர் கபீர் சிங் ஜெய் பீம் குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    சரியான முறையில் கொண்டாடப்பட வேண்டிய படம் என நடிகர் அசோக் செல்வன் குறிப்பிட்டுள்ளார்.



    சூர்யாவின் வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: