ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற ராஜாக்கண்ணு மனைவி பார்வதி குடும்பத்தினருக்கு நடிகர் லாரன்ஸ் 5 லட்சம் உதவித்தொகை வழங்கியுள்ளார்.
ஜெய் பீம் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அதில் ராஜாக்கண்ணு என்பவரின் வாழ்க்கையை படமாக்கியிருந்தனர். இந்த நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், ராஜாகாண்ணுவின் மனைவி பார்வதிக்கு தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்து இருந்தார். ஆனால் தமிழக அரசு அவருக்கு வீடு கட்டித்தர முன் வந்தது. அதை தமிழக முதல்வரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன் காரணமாக நடிகர் லாரன்ஸ் பார்வதிக்கு வீடு கட்டித்தர ஒதுக்கிய தொகையை அவருக்கும், அவருடைய வாரிசுகளுக்கும் கொடுக்க முடிவெடுத்தார். அதன்படி பார்வதி மற்றும் இரண்டு மகன்கள், மகள் ஆகியோரை தன்னுடைய அலுவலத்திற்கு வர வைத்து, வீடு கட்ட ஒதுக்கிய 5 லட்சம் தொகையை, 4 பேருக்கும் பிரித்து வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்திற்கு உதவி கிடைக்க காரணமாக இருந்த ஜெய் பீம் படக்குழுவினருக்கும் அதை கவனத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கும் லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் லாரன்ஸ் இதேபோல இன்னும் சிலருக்கு உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக ஜல்லிக்கட்டு சமயத்தில் உயிரிழந்த சேலத்தை சேர்ந்த இளைஞனின் குடும்பத்திற்கு இலவசமாக வீடு கட்டி தந்துள்ளார். அதேபோல் புதுக்கோட்டையில் பல ஆண்டுகளாக ஆதரவற்று இறந்தவர்களின் உடல்களை தன்னுடைய சொந்த செலவில் அடக்கம் செய்துவரும் ஒருவருக்கும் இலவசமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Raghava lawrence, Actor Surya, Jai Bhim, Kollywood, Tamil Cinema