நடிகர் சூர்யா நடித்துள்ள 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யா மாற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜெய் பீம் படத்தைப் பார்த்த நடிகர் கமல் ஹாசன், சூர்யாவையும், படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்த ட்வீட்டில், “#JaiBhim பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது!
உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி!! 🙏🏽 https://t.co/JfYu0o2t6S
கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யாவின் ட்விட்டர் பதிவில், ‘நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது.
உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.