• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜெய் பீம் படத்துக்கு முன்னாள் அமைச்சர் சைலஜா டீச்சர் பாராட்டு!

ஜெய் பீம் படத்துக்கு முன்னாள் அமைச்சர் சைலஜா டீச்சர் பாராட்டு!

முன்னாள் அமைச்சர் சைலஜா டீச்சர்

முன்னாள் அமைச்சர் சைலஜா டீச்சர்

ஜெய் பீம் படத்தைப் பார்த்த கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் ஜெய் பீம் படத்தை பாராட்டியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜெய் பீம் படத்துக்கு அனைத்து திசைகளிலிருந்தும் பாராட்டு மழை பொழிகிறது. கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ,டீச்சர் ஜெய் பீம் படத்தை பாராட்டியுள்ளார்.

ஜெய் பீம் திரைப்படம் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. போலீஸ் கஸ்டடியில் கொலை செய்யப்பட்ட இருளர் பழங்குடி இளைஞருக்கு சட்டப்பூர்வமாக போராடி நீதி பெற்றுத் தந்த கதை. செயற்கை நெடி அதிகம் இல்லாமல் எடுக்கப்பட்ட ஜெய் பீம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி கேள்வி எழுப்பியதே அதன் வெற்றி எனலாம்

கடந்த 2 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் படம் வெளியானது. ஓடிடி தளம் என்பதால் ஒரே நாளில் படம் எல்லைகள் கடந்து அனைத்து மக்களையும் சென்றடைந்தது. பல்வேறு தரப்பினர் படத்தை பாராட்டி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினின் பாராட்டு இதில் முக்கியமானது.

இந்நிலையில் ஜெய் பீம் படத்தைப் பார்த்த கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் ஜெய் பீம் படத்தை பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய்பீம் படம் மாற்றத்திற்கான ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. சமூகத்தின் வன்முறை மற்றும் சமூக பாகுபாடு குறித்த கடினமான உண்மைகளின் சித்தரிப்பைக் காட்டுகிறது. பிரமாதமாக எடுத்துள்ளார்கள். முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்

Also read... விஜய் 67 - இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் தாணு?

சமூகநீதியின்பால் அக்கறை உள்ள அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். சாதிய படிநிலையை விரும்புகிறவர்கள் படத்தை கேள்வி கேட்கிறார்கள். இந்த இரண்டுமே ஜெய் பீமின் வெற்றியை உரக்கச் சொல்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: