முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆஸ்கர் இறுதிப்போட்டியில் சூர்யாவின் ஜெய்பீம்? வைரலாகும் தொகுப்பாளரின் ட்வீட்!

ஆஸ்கர் இறுதிப்போட்டியில் சூர்யாவின் ஜெய்பீம்? வைரலாகும் தொகுப்பாளரின் ட்வீட்!

ஜெய் பீம்

ஜெய் பீம்

ஆஸ்கர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விருதை வெல்லுமா ஜெய் பீம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

  • Last Updated :

ஆஸ்கர் விருது பட்டியலில் இருக்கும் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் தன்னை மிகுந்த வியப்படைய செய்யும் என நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜாக்குலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு - பார்வதி ஆகியோர் சந்தித்த பிரச்னைகளையும், அவர்களுக்கு நீதி வாங்கித் தந்த அப்போதைய வழக்கறிஞர் சந்துருவையும் மையப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டிருந்தது.

ஜெய் பீம்படத்தைப் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். அதே நேரத்தில் படம் சில சர்ச்சைகளையும் கிளப்பியது. அமேசான் பிரைம்வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் மொழி, மாநில எல்லைகளை கடந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் மக்கள் முன் ஜெய் பீம் திரையிடப்பட்டது.

இயக்குநர் ஞானவேலின் பேட்டியுடன் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் தளத்தில் படம் பதிவேற்றப்பட்ட நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலிலும் ஜெய்பீம் இடம் பெற்றது. ஆஸ்கர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விருதை வெல்லுமா ஜெய் பீம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Valimai: அஜித்தின் வலிமை முன்பதிவு தொடக்கம்!

இந்நிலையில், நாளை ஆஸ்கர் இறுதிப்போட்டிக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகவிருக்கிறது. இந்தப் பட்டியலை ஜாக்குலின் கோலே எனும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கிடையே பத்திரிக்கையாளர் ஒருவர், ‘நாளை காலை எந்த ஆஸ்கர் பரிந்துரை உங்களிடம் மிகப்பெரிய ரியாக்சனை ஏற்படுத்தும்’ என்று கேட்டிருந்தார்.

சன் டிவி சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராமில் ஃபலோ பண்ணும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

அதற்கு பதிலளித்துள்ள ஜாக்குலின் கோலே ‘சிறந்த படத்துக்கான பரிந்துரையில் ‘ஜெய் பீம்’ - என்னை நம்புங்கள்” என்று கூறியுள்ளார். அதோடு, ‘ஜெய் பீம் ரசிகர்களே, நான் அந்தத் திரைப்படத்தை விரும்பினேன். அது விருதுக்கு பரிந்துரைக்கப்படுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பரிந்துரைக்கப்பட்டால் நான் சத்தமாக உற்சாகப்படுத்துவேன். உங்கள் அன்புக்கு நன்றி ஆனால் என்னிடம் எந்த உள் தகவலும் இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்... கதையைக் கேட்டு கண்ணீர் விட்ட கஸ்தூரி ராஜா?

இந்த ட்வீட் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு ஆஸ்கர் விருதை ஜெய் பீம் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Actor Suriya, Jai Bhim, Oscar Awards