• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜெய் பீம் சர்ச்சை: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeStandWithSanthanam ஹேஷ்டேக்

ஜெய் பீம் சர்ச்சை: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeStandWithSanthanam ஹேஷ்டேக்

சந்தானம்

சந்தானம்

 ஒன்லைன் க்ளிப்பிங்கை வைத்து எதுவும் பேசாதீங்க. என நடிகர் சந்தானத்துக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    ஜெய்பீம் படம் தொடர்பாக சந்தானம் கருத்து தெரிவித்த நிலையில் அவருக்கு ஆதரவாக #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

    நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு – பார்வதி ஆகியோர் சந்தித்த பிரச்னைகளையும், அவர்களுக்கு நீதி வாங்கித் தந்த அப்போதைய வழக்கறிஞர் சந்துருவையும் மையப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டிருந்தது. .ஜெய் பீமில் பழங்குடி இளைஞனை அடித்தே கொலை செய்யும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் வீட்டில் இருக்கும் காட்சியில், வன்னியரின் அடையாளமான அக்கினி குண்டத்தின் புகைப்படம் பின்னணியில் இருக்கும். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சமுகத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு வன்முறை போலீஸ்காரர் வன்னியராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் எனக் கூறி ஜெய் பீம் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    Also Read:  ஜெய் பீம் சர்ச்சை: பா.ம.க-வை விமர்சனம் செய்துள்ள திமுக-வின் முரசொலி நாளேடு

    ஜெய்பீம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது. இளைஞர்கள் சிலர் சூர்யாவின் புகைப்படங்களை எரிப்பது, சமூகவலைத்தளம் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் #Westandwithsurya என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. அதில்  சூர்யாவுக்கு ஆதரவாக சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சந்தானம் ஜெய்பீம் படம் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். சென்னையில் நடந்த படவிழாவில் ஜெய்பீம் சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு அவர் பதிலளித்தார்.

    ஜெய்பீம் படம் என்று இல்லை எந்த படமாக இருந்தாலும் ஒரு கருத்தை உயர்த்தி பேசுகிறோம் என்பதற்காக மற்றொருவரை தாழ்த்தி பேசக்கூடாது. சினிமா என்பது 2 மணி நேர பொழுதுபோக்கு திரையரங்குகளில் அனைத்து மதம், ஜாதியை சேர்ந்த மக்கள் ஒன்றாக அமர்ந்து ஒரு விஷயத்தை பார்க்க 2 மணி நேரம் செலவு செய்வதற்காக வருகிறார்கள் அங்கு தேவையில்லாத விஷயத்தை பேச வேண்டாம். யாரை வேண்டுமானாலும் உயர்த்தி பேசுங்க.. அடுத்தவங்கள தாழ்த்தி பேசாதீங்க” என அறிவுரை கூறியிருந்தார்.

    இந்நிலையில் நகைச்சுவை என்ற பெயரில் சந்தானம் தன்னுடைய படங்களில் அடுத்தவர்களை பாடி சேமிங் செய்கிறார். அவர் அறிவுரை கூறலாமா என சிலர்  கேள்விகளை முன்வைத்தனர். சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தில் கூட காமெடி என்ற பெயரில் மாற்றுத்திறனாளியாக நடித்த நபரை சைடு ஸ்டாண்ட் என கிண்டல் செய்தார். இதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் கடும் கண்டனம் பதிவு செய்திருந்தனர். இப்படி இருக்க சந்தானம்  அறிவுரை கூறலாமா என நெட்டிசன்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

     



    இந்நிலையில் நடிகர் சந்தானத்திற்கு ஆதரவாக #Westandwithsanthanam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.  ஒன்லைன் க்ளிப்பிங்கை வைத்து எதுவும் பேசாதீங்க.. சந்தானம் பேசினதை முழுவதுமாக கேளுங்க என சிலர் ட்விட்டரில் அவர் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளனர். நடிகர் சந்தானத்துக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: