நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு அமேசான் பிரைம் தளத்தில் வெளிவந்த ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருந்ததாக கூறி சர்ச்சைகள் எழுந்தது. இதில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகம் சார்பில் முதல்முதலாக சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் குரல் கொடுத்த நிலையில் அவரைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கினார். மேலும் சமூகநீதி குறித்து பேசும் இதுபோன்ற படங்கள் வெளிவருவதால் சமத்துவத்துக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு கோபம் வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இவரைப் போலவே இயக்குநர் அமீர், லோகேஷ் கனகராஜ் என பலரும் ஆதரவு தெரிவிக்க, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா, எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள் அன்புமணி எனவும் கேட்டுக்கொண்டார்.
Also Read: சூர்யாவை உதைக்க சொன்னவரை அடியுங்கள் நான் காசு தருகிறேன் - சீமான்
நடிகர்கள் டி.ராஜேந்தர், சித்தார்த், பிரகாஷ்ராஜ், கருணாஸ், நாசர் ஆகியோரும் அடுத்தடுத்து அறிக்கைகள் வெளியிட்டு சூர்யாவுக்கு ஆதரவை தெரிவித்தனர். குறிப்பாக, வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகர் சத்யராஜ், இவ்விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்த பலரும் களமிறங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
மேலும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “ ஒடுக்கப்பட்ட ஜாதிக்கு குரல் கொடுக்கும் சூர்யாவுக்கு ஒருபோதும் குறிப்பிட்ட ஒரு ஜாதியை அவமதிக்கும் நோக்கம் இருக்க வாய்ப்பேயில்லை என கூறி சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பலர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக இல்லாதது ஏன் என்ற கேள்வியும் எழத் தொடங்கியது. இது ஒருபுறமிருக்க திரையுலகில் இருந்தே சூர்யாவுக்கு எதிர்ப்பு குரல்களும் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியது. இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குநரும் தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமான கௌதமன், இந்த விவகாரத்தில் யார் பின்வாங்கினாலும் நான் சூர்யாவை விடப்போவதில்லை.. சூர்யா மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என கூறியிருந்தார்.
Also Read: ஜெய் பீம் சர்ச்சை: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeStandWithSanthanam ஹேஷ்டேக்
அதேபோல் தன்னுடைய நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் சபாபதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெய் பீம் விவகாரம் குறித்து பேசிய நடிகர் சந்தானம், ‘ஜெய் பீம்’ மட்டுமல்ல எந்தப் படமாக இருந்தாலும் நாம் ஒரு கருத்தைப் பற்றி பேசும்போது அது உயர்ந்தது, சிறந்தது என என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். ஆனால், மற்றவர்களைத் தாழ்த்தி பேசக்கூடாது என்றார்.
இந்த நிலையில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் டிவிட்டரின் மூலம் நன்றி தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, இதுபோன்ற பேராதரவை இதற்குமுன்பு தான் கண்டதில்லை எனவும் நெகிழ்ந்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Santhanam, Actor sathyaraj, Actor Surya, Actress Jothika, Anbumani ramadoss, Dr Ramadoss, Jai Bhim, Pa. ranjith, PMK, Surya, Vetrimaran