ஜெய் பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘ஜெய் பீம்’. இதில் வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருந்தார் சூர்யா. அமேசான் ப்ரைமில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினார்கள்.
ஆனால் படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் இருவரும், "குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் எண்ணத்தில் படம் எடுக்கவில்லை" என விளக்கமளித்தனர். இருப்பினும் பாமக தரப்பு ஜெய் பீம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பிளாக் அண்ட் ஒயிட் உடையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த தமன்னா!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்ததில் அந்த புகார் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து, வேளச்சேரி காவல் நிலையத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் சூர்யா மீது 295 என்ற பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.