Home /News /entertainment /

ஜெய் நடிக்கும் ‘எண்ணித் துணிக’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…

ஜெய் நடிக்கும் ‘எண்ணித் துணிக’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…

எண்ணித் துணிக படத்தில் ஜெய்

எண்ணித் துணிக படத்தில் ஜெய்

எண்ணி துணி படத்தை தவிர்த்து காஃபி வித் காதல்,பிரேக்கிங் நியூஸ், கோபி நயினாருடன் ஒரு படம், 1 கிலோ மீட்டர், உள்பட மேலும் 2 படங்களில் ஜெய் பிஸியாக நடித்து வருகிறார்.

    ஜெய், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித் துணிக படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    எஸ்.கே. வெற்றிச் செல்வன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார்.

    ஆக்சன் த்ரில்லர் ஜேனரில் எண்ணித் துணிக திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி.. அபர்ணா பாலமுரளி நியூஸ் 18 தமிழுக்கு பேட்டி!

    ட்ரெய்லர் வெளியீட்டையொட்டி சென்னையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போதே படத்தின் ஆடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.



    விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'பகவதி' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதன்பின்னர், சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை ஜெய் உருவாக்கியுள்ளார்.

    தற்போது எண்ணி துணி படத்தை தவிர்த்து காஃபி வித் காதல்,பிரேக்கிங் நியூஸ், கோபி நயினாருடன் ஒரு படம், 1 கிலோ மீட்டர், உள்பட மேலும் 2 படங்களில் ஜெய் பிஸியாக நடித்து வருகிறார்.

    தனுஷ், அக்சய் குமார் உள்பட பிரபலங்களின் பாராட்டு மழையில் சூரரைப் போற்று படக்குழு... 

    கலகலப்பு 2 படத்திற்கு பின்னர் ஜெய் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் இந்த திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி