நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 15 பேர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 15 பேர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்.
  • Share this:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 15 பேரை நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 -ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவராக ஜாகுவார் தங்கம் தேர்வு செய்யப்பட்டார்.

பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நந்தகோபால், வங்கி கணக்குகளை ஜாகுவார் தங்கம் கையாளக் கூடாது என உரிமையியல் வழக்கு தொடர்ந்ததில், சங்கத்தின் வங்கி பண பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை எதிர்த்து ஜாகுவார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை வங்கி பரிவர்த்தனைகளை இருதரப்பும் கையாள கூடாது என உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை செயற்குழு கூட்டமோ, பொதுக்குழு கூட்டமோ இருதரப்பும் கூட்டக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஜாகுவார் தங்கத்தின் எதிரணியைச் சேர்ந்த ஏ.எம். ரத்னம், கலைக்கோட்டுதயம், ஜம்பு, துரைசாமி, நந்தகோபால் உள்ளிட்ட 15 பேர் பலமுறை செயற்குழு கூட்டம் கூட்டியதாக 15 பேர் மீதும் ஜாகுவார் தங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏ.எம் .ரத்னம், துரைசாமி, ஜம்பு, நந்தகோபால் செட்டி உள்ளிட்ட 15 பேரையும் மார்ச் 5 -ம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.மேலும் படிக்க: மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்?


First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading