ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு 5-ஆம் பாகத்தில் நடிக்கும் ஜெகதி ஸ்ரீகுமார்!

ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு 5-ஆம் பாகத்தில் நடிக்கும் ஜெகதி ஸ்ரீகுமார்!

ஜெகதி ஸ்ரீகுமார்

ஜெகதி ஸ்ரீகுமார்

இதன் அடுத்தடுத்த பாகங்கள் ஜாக்ரதா, சேதுராம ஐயர் சிபிஐ, நேரறியான் சிபிஐ என்ற பெயர்களில் வெளியாகின.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மம்முட்டி நடிக்கும் ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படத்தின் ஐந்தாம் பாகத்தில் நடிகர் ஜெகதி ஸ்ரீகுமாரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிக பாகங்கள் வந்த சீரிஸ் ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு. மம்முட்டி சேதுராம ஐயர் என்ற சிபிஐ அதிகாரியாக நடிக்கும் இந்த சீரிஸின் முதல் பாகமான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு 1988-ல் வெளியானது. ஒரு கொலையை துப்பறியும் இந்தப் படம் தமிழகத்திலும் 100 நாள்களை கடந்து ஓடியது. எஸ்.என்.சுவாமி கதையை எழுத மது படத்தை இயக்கியிருந்தார். சிபிஐ அதிகாரியின் உதவியாளராக முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார் நடித்திருந்தனர்.

இதன் அடுத்தடுத்த பாகங்கள் ஜாக்ரதா, சேதுராம ஐயர் சிபிஐ, நேரறியான் சிபிஐ என்ற பெயர்களில் வெளியாகின. இந்தப் படங்களில் ஜெகதி ஸ்ரீகுமார் மாறுவேடத்தில் துப்பறியும் காட்சிகள் நகைச்சுவையும், சுவாரஸியமும் கொண்டவை. சமீபத்தில் இதன் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

2012-ல் நடந்த விபத்தில் காயமடைந்த ஜெகதி ஸ்ரீகுமார் பேசவோ, உடலை அதிகம் அசைக்கவோ முடியாத நிலையில் பல வருடங்களாக சக்கர நாற்காலியில் நடமாடி வருகிறார். முதல் நான்கு பாகங்களில் நடித்தவர் இந்த ஐந்தாவது பாகத்தில் நடிக்க முடியாமல் போனதே என ரசிகர்களுக்கு கவலை. இந்நிலையில், ஜெகதி ஸ்ரீகுமார் ஐந்தாம் பாகத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அவரது இப்போதைய நிலையை கணக்கில் கொண்டு அதற்கேற்ப அவரது கதாபாத்திரம் எழுதப்பட்டிருப்பதாகவும், அவரது வீட்டிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூன்று மாதங்கள் ஓய்வில் செல்லும் விஜய்...!

Jagathy Sreekumar to play with mammootty in CBI 5th part, jagathy sreekumar, jagathy sreekumar accident, jagathy sreekumar comedy, jagathy sreekumar family, jagathy sreekumar last movie, jagathy sreekumar net worth, jagathy sreekumar son, jagathy sreekumar accident year, jagathy sreekumar mammootty, ஜெகதி ஸ்ரீகுமார், ஜெகதி ஸ்ரீகுமார் சிபிஐ, ஜெகதி ஸ்ரீகுமார் மம்மூட்டி, ஜெகதி ஸ்ரீகுமார் விபத்து

முதல் நான்கு பாகங்களை எழுதிய எஸ்.என்.சுவாமியே இந்த ஐந்தாம் பாகத்துக்கான கதையையும் எழுதுகிறார். மது இயக்குகிறார். ஜெகதி ஸ்ரீகுமாரின் இரண்டாம் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Mammootty