விஜய் பிறந்தநாள் போஸ்டரில் முதல்வர் புகைப்படம்... தஞ்சையில் பரபரப்பு

நாளை விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் விஜய்க்கு பல சுவாரஸ்யமான அடைமொழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

விஜய் பிறந்தநாள் போஸ்டரில் முதல்வர் புகைப்படம்... தஞ்சையில் பரபரப்பு
நடிகர் விஜய்
  • Share this:
நடிகர் விஜய்க்கு நாளை 46-வது பிறந்தநாள். கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பேனர் போஸ்டர் பேப்பர் விளம்பரங்கள் வேண்டாம் என்று விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் ரசிகர்கள் சிலர் விஜய்க்காக போஸ்டர் அடித்து சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.

அதில் கும்பகோணத்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் விஜய் இருக்கும் புகைப்படத்துடன் ‘தமிழகத்தின் ஜெகன்மோகனாரே’ என்ற அடைமொழியும் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கும்பகோணம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்கதுரை, பெஃலிக்ஸ், செந்தில்குமார், கார்த்தி ஆகியோர் கூறும்போது, “தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் விஜய் சரவணன் உத்தரவின்படி நாளை ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உள்ளது. அவரை வாழ்த்தி கும்பகோணம் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளோம்.
எப்போதும் எம்ஜிஆர் போன்று சிறந்த தலைவராக தமிழகத்திற்கு விஜய் இருப்பார் என்று தொடர்ந்து விஜய் ரசிகர்களான நாங்கள் தெரிவித்து வருகிறோம். தமிழகத்திற்கு சிறந்த தலைவராக விளங்கிய எம்ஜிஆரை போல், ஆந்திராவில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.

எனவே அவருடன் விஜய்யை ஒப்பிட்டு நாளைய தமிழகத்தின் தலைவராக விஜய் தலைமை ஏற்று ஜெகன்மோகன் ரெட்டி போல் மக்களின் தலைவராக விளங்குவார் என்பதை உணர்த்தும் விதமாக இந்த போஸ்டரை ஒட்டி உள்ளோம்” என்று தெரிவித்தனர்.மேலும் படிக்க: வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு விஜய் மக்கள் இயக்கம் நிதியுதவிஇது ஒருபுறமிருக்க மதுரையில் ஒட்டபட்டிருக்கும் போஸ்டர்களில் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் கபசுர குடிநீரைப் போல் எங்களைக் காக்கும் கபசுரரே, கடவுள், வாத்தியாரய்யா என்ற அடைமொழிகளும் இடம்பெற்றுள்ளன.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading