தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ஓடிடியில் ரிலீசாகிறதா? தயாரிப்பாளர் விளக்கம்

‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ஓடிடியில் ரிலீசாகிறதா? தயாரிப்பாளர் விளக்கம்
ஜகமே தந்திரம்
  • Share this:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ஜகமே தந்திரம். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடியிருப்பதால் இன்னும் திரைக்கு வரவில்லை.

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக மோஷன் போஸ்டர், சிங்கிள் டிராக் என இப்படத்தின் அத்தனை முன்னோட்டங்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

சமீபத்தில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் விளக்கமளித்துள்ளார். அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “தியேட்டர்கள் திறக்கப்படும் வரை பொறுமையாக இருக்கவும். வதந்திகளை நம்ப வேண்டாம். ரகிட ரகிட என தனுஷ் பாடுவதை திரையரங்கில் காண ஒட்டு மொத்த குழுவும் காத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.இதன்மூலம் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்பதை தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.
First published: August 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading