'என்ன மட்டும் லவ்யூ பண்ணு புஜ்ஜி'.. வெளியானது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புஜ்ஜி பாடல்..

ஜகமே தந்திரம்

நடிகர் தனுஷ் நடிப்பில் திரைக்குவரவுள்ள ‘ஜகமே தந்திரம்’படத்தின் புஜ்ஜி பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • Share this:
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.

  தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக மோஷன் போஸ்டர், சிங்கிள் டிராக் என இந்தப் படத்தின் அத்தனை முன்னோட்டங்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

  இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13-ம் தேதி (இன்று) ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ‘புஜ்ஜி’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

      

  'என்னமட்டும் லவ்யூ பண்ணு புஜ்ஜி' என ஆரம்பிக்கும் இந்த பாடல் தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: