தனுஷ் பட பாடலுக்கு செல்வராகவனின் வித்தியாசமான டான்ஸ் - வீடியோ

என் ‘ரகிட ரகிட ரகிட’ நடனம் என்று குறிப்பிட்டு அதனுடன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

தனுஷ் பட பாடலுக்கு செல்வராகவனின் வித்தியாசமான டான்ஸ் - வீடியோ
தனுஷ் | செல்வராகவன்
  • Share this:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் ‘ரகிட ரகிட’ பாடல் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

யூடியூபில் 34 மில்லியனுக்கும் அதிக பார்வைகளைப் பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்கு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரும் நடனமாடி அதை சமூகவலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என் ரகிட ரகிட நடனம்’ எனக் கூறி வீடியோ பதிவிட்டிருந்தார். அதில் காருக்குள் அமர்ந்தபடி பாடலை ஒலிக்கவிட்டு அதை வீடியோ பதிவாக செய்திருக்கிறார் செல்வராகவன்.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இது நடனமா? போன் தான் நடனமாடுகிறது என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.இதுவரை திரைக்குப் பின்னால் இருந்த இயக்குநர் செல்வராகவன், அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading