பண மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்லின் பெர்னான்டஸின் ரூ.7 கோடியே 27 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ரான்பாக்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவாரன ஷிவிந்தர் சிங் பண மோசடி வழக்கில் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவரை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர, ஷிவிந்தரின் மனைவி அதிதி சிங், இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு ரூ.200 வழங்கியதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில், சுகேஷ் சந்திரசேகரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்போது சுகேஷிடம் பெராரி, பென்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 23 சொகுசு கார்கள், சொகுசு பங்களாக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், இவருக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டசுடன் தொடர்பு இருந்து விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுகேஷ் சந்திரசேகர், ஜாக்லின் பெர்னாண்டஸிடம் ரூ.5 கோடியே 71லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அளித்ததாக, கூறப்படுகிறது. ரூ.52 லட்சம் மதிப்பிலான குதிரை, ரூ.9 லட்சம் மதிப்பிலான பெர்சியன் பூனை, ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை நடிகைக்கு சுகேஷ் வழங்கியதை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சியோமி நிறுவனத்தின் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை நடவடிக்கை
இதையடுத்து நடிகையின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஜாக்குலின் தரப்பில் இருந்து இதுவரை எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. சுகேஷ் சந்திரசேகர் மீது 15க்கும் மேற்பட்ட எப்ஐஆர்கள் பதியப்பட்டுள்ளன. இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கிலும் இவர்தான் இடைத்தரகார் என விசாரணையில் வெளிவந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.