ஜோதிகாவை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு பேசிய மன்சூர் அலிகான்!

படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

news18
Updated: July 27, 2019, 4:43 PM IST
ஜோதிகாவை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு பேசிய மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் | ஜோதிகா
news18
Updated: July 27, 2019, 4:43 PM IST
நடிகை ஜோதிகாவை பார்ப்பது முதல்வர் ஜெயலலிதாவைப் பார்ப்பது போல் உள்ளது என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

மகளிர் மட்டும், 36 வயதினிலே ஆகிய 2 படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக சூர்யாவின் 2டி என்டர்டெயின் மென்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படம் ஜாக்பாட். இந்தப் படத்தை குலேபகாவலி பட இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ளார்.

படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.


விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டுவிழா தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

பட விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “நடிகை ஜோதிகாவைப் பார்ப்பது முதல்வர் ஜெயலலிதாவைப் பார்ப்பது போல் உள்ளது
சூர்யா பேசிய புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துகளை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Loading...

வீடியோ பார்க்க: ஆடை எனக்காகவே தயார் செய்யப்பட்ட கதை: நடிகை அமலா பால்

 
First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...