'அண்ணாத்த’ ரஜினிகாந்துடன் மல்லுக்கட்ட வரும் ‘பிகில்’ வில்லன்..

ரஜினிகாந்த்

'அண்ணாத்த' படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராஃப் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Share this:
  ‘தர்பார்’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

  இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது முதன்மை வில்லன் கேரக்டரில் ஜாக்கி ஷராஃப் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடைசியாக தமிழில் ‘பிகில்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு திரைப்பட படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.  நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகளை சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் செட் அமைத்து படமாக்க திட்டமிட்டிருக்கும் படக்குழு, ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை ஜனவரி மாதத்தில் படமாக்கவும் முடிவு செய்துள்ளது.  இந்த் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘அண்ணாத்த’ திரைப்படம் கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: