முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஹைதராபாத்தில் ஷூட்டிங்.. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்?!

ஹைதராபாத்தில் ஷூட்டிங்.. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்?!

ஜெயிலர்

ஜெயிலர்

ஜெயிலரில் ஏற்கனவே மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜாக்கி ஷெராஃப் மீண்டும் ரஜினியுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளத் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர் இடம்பெரும் பெரும்பாலான பகுதிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாக்கி ஷெராஃப் படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த பிரபல ஆங்கில ஊடகம் அவரை அணுகிய போது, இன்னும் அவர் ஜெயிலர் படத்தில் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்துள்ளார். “நெல்சனும் அவரது குழுவினரும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக ஜாக்கி ஷெராப்பை அணுகியது உண்மை தான். இருப்பினும், அவர் இன்னும் ஸ்கிரிப்டைப் படித்து, அவரது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அனலைஸ் செய்யவில்லை” என்று ஷெராஃப்பின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ரஜினிகாந்த் மற்றும் ஜாக்கி ஷெராஃப் இதற்கு முன்பு 1987-ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான உத்தர் தக்ஷினில் இணைந்து பணியாற்றினர். 2014-ம் ஆண்டு கோச்சடையான் என்ற போட்டோ ரியலிஸ்டிக் மோஷன் கேப்சர் படத்திலும் திரையைப் பகிர்ந்து கொண்டனர்.

ஜெயிலரில் ஏற்கனவே மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உள்ளனர். முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார், இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth