நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துவருகிறார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் 70 சதவிகிதம் படமாக்கப்பட்டுவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
ஜெயிலர் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துவருகின்றன. இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துவருகின்றனர்.
பான் இந்தியன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் நடித்துவருகிறார்கள். பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்தப் படத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
Jackie Shroff from the sets of #Jailer 🔥
@rajinikanth @bindasbhidu @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/O9ees6RuJt
— Sun Pictures (@sunpictures) February 5, 2023
இவர்களுடன் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்பும் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதனை சன் பிகச்ர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்புத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வெளியாகியிருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anirudh, Rajinikanth