‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ ஸ்னீக் பீக் வீடியோ! விமலை விடாது துரத்தும் நாயகி!

அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

news18
Updated: December 5, 2018, 10:05 PM IST
‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ ஸ்னீக் பீக் வீடியோ! விமலை விடாது துரத்தும் நாயகி!
படம் போஸ்டர்
news18
Updated: December 5, 2018, 10:05 PM IST
நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

மன்னர் வகையறா படத்துக்கு பின் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகேஷ் இயக்கியுள்ளார். படத்தில் விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பூர்ணா, மியா ராய் ஆகியோர் நடித்துள்ளனர். அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். சாய் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் டிசம்பர் 7-ம் தேதி 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறையினர் ‘A' சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி இருந்தது. அதன்மூலம் இந்தப் படம் ஏற்கெனவே வெளியாகி சர்ச்சைகளை சம்பாதித்த இருட்டு அறைக்குள் முரட்டுக் குத்து பட பாணியில் உருவாகி இருப்பது தெரியவந்தது.

தற்போது இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Also Watch:
First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்