ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை - தந்தை சுரேஷ் பாபு

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர்.

ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை - தந்தை சுரேஷ் பாபு
மிஹிகா பஜாஜ் உடன் ராணா
  • Share this:
நடிகர் ராணா டகுபதிக்கு இன்னும் நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என்று அவரது தந்தை கூறியுள்ளார்.

தமிழில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராணா அதிகமாக பேசப்பட்டார்.
இவரது திருமணம் குறித்து திரையுலகு மட்டும் அல்லாது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் நடிகர் ராணா கடந்த 12-ம் தேதி தனது காதலி மிஹீகா பஜாஜை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர்.


இந்நிலையில் இன்று மிஹீகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் ராணா வெளியிட அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை அவரது தந்தை சுரேஷ் பாபு மறுத்துள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ராணாவின் தந்தை சுரேஷ்பாபு, நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறவில்லை. திருமணத்துக்கு பிந்தைய மற்றும் முந்தைய நிகழ்ச்சிகளுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இரு குடும்பங்களும் இன்று விவாதித்தன. இது தெலுங்கு குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான்” என்று கூறியுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading