வர்மா படத்திலிருந்து நானாகவே விலகிக்கொண்டேன் - இயக்குனர் பாலா விளக்கம்!

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் பாலா இயக்கினார்.

வர்மா படத்திலிருந்து நானாகவே விலகிக்கொண்டேன் - இயக்குனர் பாலா விளக்கம்!
இயக்குநர் பாலா
  • News18
  • Last Updated: February 9, 2019, 10:06 PM IST
  • Share this:
வர்மா படத்திலிருந்து நானாகவே விலகிக்கொண்டேன் என்று இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிய ‘வர்மா’ படத்தை பாலா இயக்கியிருந்த நிலையில், இந்தப்படம் திரைக்கு வராது என்று அப்படத்தை தயாரித்த இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்தது.

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.


இதனை தமிழில் பாலா இயக்கினார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார்.

படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானநிலையில் இந்தப்படம் கைவிடப்படுவதாக இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்தது. இதே கதை புதிய இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் பாலா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கேன்.படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நானாக எடுத்த முடிவு. கடந்த ஜனவரி 22-ம் தேதியே தயாரிப்பாளருடன் இதற்காக செய்துகொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு (ஒப்பந்த பத்திரத்தின் பிரதி தனியாக இணைக்கப்பட்டுள்ளது).

ஒப்பந்த பத்திரத்தின் பிரதி.


ஒப்பந்த பத்திரத்தின் பிரதி.


மேலும், துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை  என்று அந்த அறிக்கையில் பாலா தெரிவித்துள்ளார்.

Also watch

First published: February 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading