நடிகர் விஜய் வீடுகளில் ஐடி ரெய்டு ! ஷூட்டிங்கில் உள்ள விஜய்யிடம் 5 மணி நேரமாக விசாரணை

நடிகர் விஜய் வீடுகளில் ஐடி ரெய்டு ! ஷூட்டிங்கில் உள்ள விஜய்யிடம் 5 மணி நேரமாக விசாரணை
விஜய்
  • Share this:
பிகில் பட விவகாரம் தொடர்பாக சென்னை நீலாங்கரை, சாலிகிராமத்திலுள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனம், அன்பு செழியன் தொடர்புள்ள 35 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். பிகில் படத்துக்கு சம்பளம் வாங்கியது தொடர்பாக விஜயிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலேயே விஜயிடம் விசாரணை நடத்த முயற்சி செய்தனர். அங்கு விசாரணை நடத்த வாய்ப்பு இல்லாததால், வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று விஜயிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர், அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்யவுள்ளனர். இதற்கிடையில், சென்னை சாலிகிராமம், நீலாங்கரையிலுள்ள விஜயின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.


Also see:

 
First published: February 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading