வருமான வரி சோதனை நிறைவு... விஜய்யின் சம்பள விவரத்தை வெளியிட்ட வருமான வரித்துறையினர்

பனையூர் எட்டாவது அவன்யூவில் உள்ள நடிகர் விஜயின் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் ஆய்வு செய்தனர்.

வருமான வரி சோதனை நிறைவு... விஜய்யின் சம்பள விவரத்தை வெளியிட்ட வருமான வரித்துறையினர்
விஜய்
  • Share this:
நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வந்ததாக வருமானத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் விஜய்யின் சம்பள விவரத்தையும் வெளியிட்டுள்ளனர்.

பிகில் வரி ஏய்ப்பு புகாரில், கடலூரில் மாஸ்டர் படபிடிப்பில் இருந்த நடிகர் விஜயை அவரது வீட்டுக்கு அழைத்துவந்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரண்டு நாட்கள் நடந்த விசாரணையின் இறுதியில், சில அறைகள், லாக்கர்கள், டிராயர்களை வருமானவரித் துறையினர் அடைத்து சீல் வைத்துவிட்டுச் சென்றனர்.

இந்த நிலையில், பனையூரில் உள்ள நடிகர் விஜயின் பங்களாவிற்கு இன்று காலை 3 வாகனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். சீலிடப்பட்ட அறை, லாக்கர்களைத் திறந்த அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.


பனையூர் எட்டாவது அவன்யூவில் உள்ள நடிகர் விஜயின் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாக தெரிவித்து சோதனையின் போது வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

மேலும் விஜய்யின் சம்பள விவரத்தையும் வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய்க்கு பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Also see:
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading