ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாவ்.. இறை உணர்வை இப்படி சொல்லிட்டாரே.. காந்தாராவை பாராட்டிய மோகன் ஜி!

வாவ்.. இறை உணர்வை இப்படி சொல்லிட்டாரே.. காந்தாராவை பாராட்டிய மோகன் ஜி!

இயக்குநர் மோகன் ஜி

இயக்குநர் மோகன் ஜி

காந்தாரா பட இயக்குனர் ரிஷாப் ஷெட்டியை பாராட்டி, படத்தின் வெற்றிக்காக வாழ்த்தி ட்வீட் செய்த இருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  "இப்படி இறை உணர்வை திரை மூலம் மக்களுக்கு கடத்துவது எளிதான காரியம் அல்ல".. காந்தாரா படத்தின் இறுதி காட்சி உங்களை உறைய வைக்கும் என்று இயக்குநர் மோகன் ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்

  பழயவண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் மோகன் ஜி. காந்தாரா பட இயக்குனர் ரிஷாப் ஷெட்டியை பாராட்டி, படத்தின் வெற்றிக்காக வாழ்த்தி ட்வீட் செய்த இருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி.

  கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸின் வெளியீடாக கன்னடத்தில் வெளியாகி இருக்கும் ‘காந்தாரா’ படத்தின் வெற்றிக்கு இயக்குநர் மோகன் ஜி வாழ்த்தியுள்ளார்.

  கேஜிஎப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. கே.ஜிஎப், கே.ஜி.எப் 2 வெற்றிக்கு பிறகு ஹோம்பலே பிலிம்ஸ் அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.

  இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ளார். பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரசிகர்கள் ஆவலாகப் பார்க்கும் படமாக காந்தாரா அமைந்துள்ளது. பல்வேறு சினிமா பிரபலங்களும் ‘காந்தாரா’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.

  தியேட்டர்களில் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து இருப்பதாக விநியோஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  Read  More: நேரில் 20000 ரசிகர்கள்.. லைவில் குவிந்த கூட்டம்.. சென்னையில் மாஸ் காட்டிய அனிருத்!

  இந்நிலையில் ‘காந்தாரா’ படக்குழுவை பாராட்டி, படத்தின் வெற்றிக்காக வாழ்த்திய  இயக்குநர் மோகன் ஜி .

  Published by:Srilekha A
  First published:

  Tags: KGF