ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மொத்தம் 4 பாடல்கள்.. சிம்புவின் பத்து தல சூப்பர் அப்டேட்

மொத்தம் 4 பாடல்கள்.. சிம்புவின் பத்து தல சூப்பர் அப்டேட்

சிலம்பரசன்

சிலம்பரசன்

சிலம்பரசன் நடித்த படம் பத்து தல திரைப்படத்தில் 4 பாடல்கள் இடம் பிடித்துள்ளன. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வரும் 11ம் தேதிக்குள் முடிக்க படக்குழு திட்டம். 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பிடித்துள்ளதகா தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கன்னடத்தில் வெளியான முஃப்தி திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவராஜ் குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். டான் கேரக்டரில் சிவராஜ் குமார் இடம்பெறும் காட்சிகள் மாஸ்ஸாக உருவாக்கப்பட்டிருக்கும்.

முஃப்தி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக சிம்புவின் பத்து தல படம் உருவாகி வருகிறது. கன்னியாகுமரி பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது ஷூட்டிங் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

முஃப்தி படத்தை போல் இல்லாமல் சிம்புவுக்கு இந்த படத்தில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக பத்து தல படத்தை டிசம்பர் 14-ஆம்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு, படக்குழுவினர் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போதைய சூழலில் பத்து தல படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து தல படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய ஒபேலி கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்பு – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில் 'பத்து தல' திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பிடித்துள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Also read... இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலின் கோஸ்டி பட ஸ்டில்ஸ்!

பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் இடம்பெறும் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டன. இதைத் தொடர்ந்து பாடல் காட்சிகான படப்பிடிப்பு மட்டும் நடைபெற உள்ளது.  அதையும் நவம்பர் 11ஆம் தேதிக்கு முன் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

மேலும், பத்து தல திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Simbhu