வாரிசு திரைப்படத்தில் விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
வாரிசு திரைப்படத்திற்கான நான்காம் கட்டப்படி பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரத்திற்கு விஜய் ராஜேந்திரன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மென் பொறியாளராக (Software and Application Developer) நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் நிஜப் பெயரையே படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்திற்கு வைத்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. வாரிசு படத்தின் 4ம் கட்ட படப்பிடிப்பு இந்த வாரத்துடன் ஹைத்ராபாத்தில் நிறைவடைகிறது.
அதை தொடர்ந்து 5-ம் கட்ட படப்பிடிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கவுள்ளனர். இந்த திரைப்படத்தில் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோ நடிக்கின்றனர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.