200 கோடியில் தயாராகும் சூர்யாவின் வாடிவாசல்...!

வாடிவாசல் சூர்யா

வாடிவாசல் ஏறுதழுவலை மையப்படுத்தியது. லாக்கப் நாவலுக்கு ஒரு பின்கதை அமைத்து விசாரணை படத்தை எடுத்தது போல், வெக்கை நாவலுக்கு ஒரு பின்கதை அமைத்து அசுரனை எடுத்தது போல், வாடிவாசல் நாவலுடன் வெற்றிமாறன் தனது கற்பனையில் ஒரு பின்கதை இணைத்து வாடிவாசலை எடுக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சூர்யா இதுவரை நடித்தப் படங்களில் அதிக பொருட்செலவில் வாடிவாசல் படம் தயாராகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

அசுரன், கர்ணன் என இரு தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து தாணுவின் வி கிரியேஷன் தயாரிக்கும் படம் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசலில் நடிக்கிறார். அசுரனைப் போலவே நாவலை தழுவி இந்தப்படத்தை வெற்றிமாறன் எடுக்கிறார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாடிவாசல் ஏறுதழுவலை மையப்படுத்தியது. லாக்கப் நாவலுக்கு ஒரு பின்கதை அமைத்து விசாரணை படத்தை எடுத்தது போல், வெக்கை நாவலுக்கு ஒரு பின்கதை அமைத்து அசுரனை எடுத்தது போல், வாடிவாசல் நாவலுடன் வெற்றிமாறன் தனது கற்பனையில் ஒரு பின்கதை இணைத்து வாடிவாசலை எடுக்கிறார். 

Also read... அவன் - இவன் பட வழக்கில் இருந்து இயக்குநர் பாலாவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு!

இந்த பின் கதையின் காரணமாக படத்தின் பட்ஜெட் 200 கோடிவரை வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையானால் சூர்யா, வெற்றிமாறன் இருவரது திரைவாழ்க்கையிலும் அதிக பட்ஜெட் படமாக வாடிவாசல் இருக்கும். வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாடிவாசலுக்கு இசையமைக்கிறார். இது அவரது 75 வது படமாகும்.

வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். ஜெயமோகனின் கதையை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இது முடிந்ததும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் தொடங்க உள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: