• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழகத்தில் தீபாவளிக்கு திரையரங்குகள் திறக்கப்படுமா?

தமிழகத்தில் தீபாவளிக்கு திரையரங்குகள் திறக்கப்படுமா?

தியேட்டர்

தியேட்டர்

VPF கட்டணம் தொடர்பாக ப்ரோஜெக்டர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு மறுத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
VPF கட்டண பிரச்னை தொடர்பாக இழுபறி நீடித்து வருவதால், தீபாவளிக்கு திரையரங்குகள் திறக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் VPF கட்டணத்தை செலுத்த முடியாது என, பாரதிராஜாவை தலைவராக கொண்ட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

VPF கட்டணம் தொடர்பாக ப்ரோஜெக்டர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு மறுத்துள்ளனர்.

Also read... Bigg boss 4 Tamil | பெண்ணை அவமதித்த ஆரிக்கு எப்படி ஆதரவளிக்கலாம்? சம்யுக்தா ஆதங்கம்..



தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் 22ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் 3 அணிகள் களம் காணும் சூழலில், VPF கட்டணம் தொடர்பாக 3 அணிகளும் வெவ்வேறு கருத்தை கொண்டுள்ளன.

எனவே,  தேர்வாகி வெற்றி பெற்று வரும் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், திரையங்குகள் திறந்து கொள்ளலாம் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: