ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பீஸ்ட்டால் அடிவாங்கும் வாரிசு? விற்பனையில் சறுக்கும் விஜய் படம்!

பீஸ்ட்டால் அடிவாங்கும் வாரிசு? விற்பனையில் சறுக்கும் விஜய் படம்!

வாரிசு

வாரிசு

படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதாக தயாரிப்பாளர் தில்ராஜு அறிவித்துள்ளார். ஆனால் தமிழக வெளியீட்டுக்கான விநியோக வியாபாரம் இன்னும் இறுதியாகவில்லை.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமை இன்னும் இறுதியாகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்தப் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

மேலும் படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதாக தயாரிப்பாளர் தில்ராஜு அறிவித்துள்ளார். ஆனால் தமிழக வெளியீட்டுக்கான விநியோக வியாபாரம் இன்னும் இறுதியாகவில்லை.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு 80 கோடி ரூபாய் விலை கூறுகிறார். தமிழத்தில் மாஸ்டர் படம் 82 கோடி ரூபாய் ஷேர் செய்தது. அதை அடிப்படையாக  கொண்டு தமிழக வெளியீட்டு உரிமை 80 கோடி என கூறுகிறார்.

Also read... கஜோலின் சலாம் வெங்கி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆனால் விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் 60 கோடி அளவிலேயே ஷேர் தொகை வசூலித்தது. இதனால் வாரிசு 80 கோடி கொடுத்து வாங்க இங்குள்ள விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இதனால் தமிழகத்தில் உள்ள விநியோக ஏரியாவிற்கு தனி தனியே விற்பனை செய்யலாமா என தயாரிப்பாளர் தில்ராஜு யோசித்து வருகிறார். இதனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இதை தவிர மற்ற உரிமைகளை நல்ல விலைக்கு வியாபாரம் செய்துள்ளார் தில்ராஜு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay