ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விறுவிறுப்பாக நடைபெறும் நயந்தாராவின் கோல்ட் பட பணிகள் - ரிலீஸ் எப்போது?

விறுவிறுப்பாக நடைபெறும் நயந்தாராவின் கோல்ட் பட பணிகள் - ரிலீஸ் எப்போது?

பிருத்திவிராஜ் -  நயன்தாரா

பிருத்திவிராஜ் -  நயன்தாரா

கோல்ட் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விரைவில் முடிவடையும். அத்துடன் புதிய வெளியீட்டு தேதியும் வெளியாக உள்ளது. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நயன்தாரா நடித்துள்ள கோல்ட் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என தகவல் வெளியாகி உள்ளது.

நேரம், பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தற்போது கோல்ட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்தில் பிருத்திவிராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தை ஓணம் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டு இருந்தார்.  அதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டு வந்தன.  அத்துடன் தமிழக வெளியீடு உரிமையும் விற்பனை செய்யப்பட்டது.

பிரேமம் திரைப்படம் தமிழகத்தில் பெரும் வெற்றி அடைந்ததால் கோல்ட் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் கடந்த 8-ம் தேதி படம் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் இறுதி நேரத்தில் படத்தின் இறுதி கட்டப் பணிகள் நிறைவடையாத காரணத்தால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தனர்.

Also read... பீஸ்ட்டால் அடிவாங்கும் வாரிசு? விற்பனையில் சறுக்கும் விஜய் படம்!

இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் கோல்ட் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும்,  விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Nayanthara