ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்... வெளியானது சூர்யா 42 படத்தின் மாஸ் அப்டேட்!

சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்... வெளியானது சூர்யா 42 படத்தின் மாஸ் அப்டேட்!

சிவா - சூர்யா

சிவா - சூர்யா

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கம் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரின் 42 வது திரைப்படமாக அது உருவாகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சூர்யா தன்னுடைய 42 ஆவது திரைப்படத்தில் 13 தோற்றங்களில் (Getup) நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கம் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரின் 42 வது திரைப்படமாக அது உருவாகிறது.

இதற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் 5 நாட்கள் நடத்தினர். அதை முடித்த கையுடன் கோவாவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை நடத்தி முக்கிய காட்சிகளை படமாக்கினர்.

இதைத் தொடர்ந்து சென்னை ஈ.வி.பி. ஸ்டுடியோ, எண்ணூர் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும் சில காட்சிகளை ஜனவரி முதல் வாரத்தில் படமாக்குகின்றனர்.

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதை ஒரே கட்டமாக படமாக்கப்பட குழுவினர் திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர். இதில் நடிகர் சூர்யா 13 தோற்றங்களில் (Getup) நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் வரும் வரலாற்றுப் பகுதிகான படப்பிடிப்பு பொங்கல் முடிந்த பிறகு நடைபெறலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Also read... நடிகை துனிஷா சர்மா தற்கொலை... லவ் ஜிகாத்தான் காரணம் என பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு நாயகியாக திஷா பதானி நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அதேபோல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya, Director siva