• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிவகார்த்திகேயன் இரு வேடங்களில் நடிக்கும் சிங்கப்பாதை...!

சிவகார்த்திகேயன் இரு வேடங்களில் நடிக்கும் சிங்கப்பாதை...!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்க, டி.இமான் படத்துக்கு இசையமைக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டான் படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்து சிங்கப்பாதை என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் அவருக்கு இரு வேடங்கள் என்கின்றன செய்திகள்.

சிவகார்த்தியேன் நடிப்பில் தயாராகியிருக்கும் டாக்டர் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தை திரையரங்கில் வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறது. இன்னொரு திரைப்படமான அயலான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. அத்துடன் டான் என்ற ரொமான்டிக் காமெடி படத்திலும் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு அடுத்து அவர் நடிக்கும் படத்துக்கு சிங்கப்பாதை என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அப்பா, மகன் என இருவேடங்களில் அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அட்லியின் உதவி இயக்குனர் அசோக் படத்தை இயக்குகிறார்.

Also read... தன்னை பற்றி மிக மோசமாக பேசிய பயில்வான் ரங்கநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஓவியா!

கேஜேஆர் ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்க, டி.இமான் படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் நாயகி மற்றும் பிற விவரங்களை சில தினங்களில் எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: