Home /News /entertainment /

தமிழகத்தில் 115 கோடியை வசூல் செய்த கே.ஜி.எஃப்-2

தமிழகத்தில் 115 கோடியை வசூல் செய்த கே.ஜி.எஃப்-2

கேஜிஎஃப் 2

கேஜிஎஃப் 2

கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி அடைந்திருப்பதால்,  அந்தப் படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளும் நடைபெறுகிறது என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :


நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப்-2 திரைப்படம் தமிழகத்தில் 54.50 கோடி ரூபாய் ஷேர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.  வெளியான முதல் நாள் முதல் அந்த படத்திற்கு நள்ளிரவு காட்சிகள்,  அதிக காட்சிகள் என சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.


சுமார் பத்து நாட்களுக்கு மேலாக அந்த திரைப்படம் தமிழகத்தில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் திரையிடப்பட்டது. நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்துடன் வெளியாகி இருந்தாலும் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது.


இதன் காரணமாக தமிழகத்தில் பெரும் வசூலை ஈட்டும் என அப்போதே கணிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கே.ஜி.எஃப்-2 திரைப்படம் 115 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.


அதன்மூலம் ஜிஎஸ்டி & உள்ளாட்சி வரி, திரையரங்கு கமிஷன் போக 54.50 கோடி ரூபாய் ஷேர் தொகையாக கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. பாகுபலி 2 திரைப்படத்திற்கு பிறகு அதிக வசூல் பான் இந்தியன் திரைப்படம் என்ற பெயரை கே.ஜி.எஃப்-2 பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி அடைந்திருப்பதால்,  அந்தப் படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளும் நடைபெறுகிறது என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அவ்வாறு மூன்றாம் பாகம் உருவானால் அந்தப் படத்திற்கும் தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: KGF 2

அடுத்த செய்தி