ஓ மை கடவுளே - விஜய் சேதுபதி நடித்த வேடத்தில் அல்லு அர்ஜுன்?

நடிகர் அல்லு அர்ஜூன்

தமிழில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை தெலுங்கில் பிவிபி சினிமாஸும், வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸும் இணைந்து ரீமேக் செய்கின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
2020 பிப்ரவரி 14 வெளியான ஓ மை கடவுளே படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததுடன் லாபத்தையும் அள்ளியது. அதில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அந்த வேடத்தை தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.

அஷ்வத் மாரிமுத்து இயக்கிய மை கடவுளேயில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஷன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜாலியான காதல் கம் கல்யாண கதையாக இதனை இயக்குனர் எடுத்திருந்தார். கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை தெலுங்கில் பிவிபி சினிமாஸும், வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸும் இணைந்து ரீமேக் செய்கின்றன. விஷ்வாக் சென்னும், மித்திலா பார்கரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழில் விஜய் சேதுபதி நடித்த கௌரவ வேடத்தில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது.

Also read... மீண்டும் பி.வாசு இயக்கத்தில் பிரபு - எந்தப் படம் தெரியுமா?

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னணி நடிகரான அவர் இதற்கு முன் அனுஷ்காவின் சரித்திரப் படம் ருத்ரமாதேவியில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். கேட்பது பிவிபி சினிமாவும், வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸும் என்பதால் அல்லு அர்ஜுன் கௌரவ வேடத்தை ஏற்றுக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: