Home /News /entertainment /

தங்கச் சுரங்கப் பின்னணியில் தயாராகும் இரஞ்சித், விக்ரம் படம்..?

தங்கச் சுரங்கப் பின்னணியில் தயாராகும் இரஞ்சித், விக்ரம் படம்..?

விக்ரம், இரஞ்சித்

விக்ரம், இரஞ்சித்

விக்ரம் நடிக்கும் படத்தை இரஞ்சித் இயக்குகிறார். சீயான் 61 என தற்காலிகமாக அழைக்கப்படும் இது ஆக்ஷன் படமாக தயாராகிறது.

  • News18
  • Last Updated :
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோலார் தங்கச் சுரங்கப் பின்னணியில் தயாராவதாக தகவல் கசிந்துள்ளது.

சென்ற வருடம் சார்பட்டா பரம்பரை வெளியான பிறகு நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை எடுத்தார் இரஞ்சித். காதல் படமான இதில் காளிதாஸ் ஜெயராம் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தை இரஞ்சித் இயக்குகிறார். சீயான் 61 என தற்காலிகமாக அழைக்கப்படும் இது ஆக்ஷன் படமாக தயாராகிறது. கோலார் தங்கச் சுரங்கம் பின்னணியில் இதன் கதை எழுதப்பட்டுள்ளதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.

சுரங்கம் என்பது தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் இடம். அங்கு அநீதியும், மாஃபியாவும் இயல்பாகவே உற்பத்தியாகும். கன்னடத்தில் தயாராகி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படமும் கோலார் தங்கச் சுரங்கப் பின்னணியில் எடுக்கப்பட்டதே. அதில் பேண்டஸி அதிகம். இரஞ்சித் உண்மைக்கு நெருக்கமாக எடுப்பார் என நம்பலாம். நட்சத்திரம் நகர்கிறது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் முடிந்ததும் சீயான் 61 தொடங்கப்பட உள்ளது. அதாவது இந்த மாத இறுதியிலேயே படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

Also read... ஜெயம் ரவி படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்...!

விக்ரமை பொறுத்தவரை அவரது நடிப்பில் உருவாக மகான் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அனேகமாக இது நேரடியாக ஓடிடியில் வெளியாகும். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வந்த கோப்ரா படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை விக்ரம் நடித்து முடித்துவிட்டார். அவர் இல்லாத சில காட்சிகளை படமாக்கினால் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும்.

Also read... இருபது நிமிட காட்சிக்கு 9 கோடி சம்பளம் வாங்கிய ஆலியா பட்...!

கௌதம் இயக்கத்தில் நடித்த துருவ நட்சத்திரம் விடை தெரியாமல் அந்தரத்தில் நிற்கிறது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனும் முடிந்துவிட்டது. இரஞ்சித் அழைக்கும் போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள விக்ரம் தயாராக இருக்கிறார். சீயான் 61 க்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கலாம் என்கின்றன தகவல்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vikram, Pa. ranjith

அடுத்த செய்தி