Home /News /entertainment /

ராம் இயக்கத்தில் தனது 50-வது படத்தை நடிக்கும் சிம்பு...?

ராம் இயக்கத்தில் தனது 50-வது படத்தை நடிக்கும் சிம்பு...?

சிம்பு

சிம்பு

Simbu: ராம் தற்போது நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
நடிகர் சிம்பு தனது 50-வது திரைப்படத்தை ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

2021 இல் சிம்பு மீது இருந்த அனைத்து விமர்சனங்களும் செய்யும் துடைத்தெறியப்பட்டன.  ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து மாநாடு திரைப்படத்தை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் முடித்துக் கொடுத்து திரையுலகில் நற்பெயரை சம்பாதித்தார் சிம்பு. படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவரது சினிமா கரியருக்கு பூஸ்டாக அமைந்தது.

தற்போது ஜெயமோகனின் எழுத்தில், கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசை. இதையடுத்து அவர் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் பத்து தல திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதில் கௌதம் கார்த்திக்கும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு கோகுல் இயக்கும் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்கிறார். இது அவரது நாற்பத்தி ஒன்பதாவது திரைப்படம் ஆகும்.

அனைத்து நடிகர்களுக்கும் 50-வது திரைப்படம் என்பது எப்போதுமே ஸ்பெஷல். இருப்பதிலேயே சிறந்த இயக்குனரின் படத்தில் நடிக்க விரும்புவர். சிம்பு அப்படி தேர்ந்தெடுத்திருப்பது இயக்குனர் ராம் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராம் சொன்ன கதை பிடித்துப் போக அதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சிம்பு என்கின்றனர். எந்த நெருக்கடியும் இன்றி வாழும் ஒரு இளைஞன் புறவுலகில் சென்று அனுபவங்களை பெறும்போது எப்படி மாறிப் போகிறான் என்பதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதையை ராம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

Also read... கதாசிரியராக மாறிய நடிகை குஷ்பு...!

ராம் தற்போது நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. எனினும் சம்பந்தப்பட்டவர்கள் இந்தத் தகவலை இன்னும் உறுதி செய்யவில்லை.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Simbhu

அடுத்த செய்தி