பிகில் பட விவகாரம்! விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

பிகில் பட விவகாரம்! விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
விஜய்
  • Share this:
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தனி ஒருவன், அனேகன் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம், அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படமானது 300 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். காலை பத்து முப்பது மணியளவில் தொடங்கிய இந்த சோதனையில், 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரத்தின் இல்லம், அலுவலகம் மற்றும் அவர்களது நான்கு திரையரங்கங்கள் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சோதனை நடைபெறும் நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சோதனை முடிவில் தெரியவரும்.


இந்தநிலையில், பிகில் படத்தில் நடித்திருந்த நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த விஜயிடம், ஆறு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பிகில் படத்துக்காக வாங்கிய சம்பளம் குறித்தும், அதற்கான பரிவர்த்தனைக் குறித்தும் விசாரணை நடத்துவதாக வருமான வரித்துறை சார்பாக விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

Also see:
First published: February 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading