ரேனிகுண்டா கருப்பன் படங்களை இயக்கிய ஆர். பன்னீர்செல்வத்தின் அடுத்தத் திரைப்படம் ஐஸ்வர்யா முருகன். சாதி ஆணவப்படுகொலையை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை அவர் எடுத்துள்ளார்.
இந்தி, தெலுங்கில் புராண இதிகாச திரைப்படங்கள் கோலோச்சும் காலகட்டத்தில் தமிழில் சமூக நீதி குறித்த திரைப்படங்கள் அணிவகுப்பது ஆச்சரியமான ஆரோக்கிய விஷயம். சென்ற வருடம் வெளியான திரைப்படங்களில் மண்டேலா, கர்ணன், சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம், ரைட்டர் போன்ற முக்கிய திரைப்படங்கள் சமூகநீதி குறித்து பேசின.
இந்திய அளவில் இந்தப் படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. ஜெய் பீம் ஆஸ்கர் ரேஸில் கலந்து கொண்டுள்ளது. இந்த வருடமும் அது போன்ற திரைப்படங்கள் தமிழில் வெளியாக உள்ளன. முதல் திரைப்படமாக ஐஸ்வர்யா முருகன் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் சாதி ஆணவக் கொலையை விலாவரியாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய வன்மத்தின் வெளிப்பாடாக சாதி
ஆணவப்படுகொலை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனை குறித்து இந்தியில் என்ஹெச் 10 திரைப்படம் வெளியானது. அனுஷ்கா சர்மா நடித்திருந்த அத்திரைப்படத்தை அவரும் அனுராக் காஷ்யபும் இணைந்து தயாரித்திருந்தனர். சாதி ஆணவப்படுகொலையை மிக நெருக்கமாக காட்சிப் படுத்தியிருந்த அத்திரைப்படத்தில் மனுஸ்மிருதி குறித்த விமர்சனங்களும் இடம்பெற்றிருந்தன.
இதையும் படிங்க.. Bro Daddy review : சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க.. ப்ரோ டாடி விமர்சனம்!
அந்தப் படத்தை தமிழில்
கர்ஜனை என்ற பெயரில் ரீமேக் செய்தனர். திரிஷா அதில் நடித்திருந்தார். ஆனால் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா முருகன் திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரைக்கு வருகிறது முழுக்க சாதி ஆணவப் படுகொலையை சித்தரிக்கும் இத்திரைப்படம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க.. சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் அபார வளர்ச்சிக்கு இதுவும் முக்கியமான காரணம்!
இந்த படுகொலைகளுக்கு காரணமாக இருக்கும் சாதிய வன்மத்தை இந்தப்படம் சரியான முறையில் சித்தரித்து இருந்தால் சென்ற வருடம் வெளியான சமூகநீதி திரைப்படங்களுக்கு கிடைத்த ஆதரவும் வரவேற்பும் இந்தத் திரைப்படத்திற்கும் கிடைக்கும். பன்னீர்செல்வம் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங் செய்துள்ளார். ஜி ஆர் வெங்கடேஷ், கே வினோத் படத்தை தயாரித்துள்ளனர். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.