திரையரங்குகளில் கூட்டம் இல்லை - தள்ளிப்போகும் ஐஸ்வர்யா முருகன் பட வெளியீடு!
திரையரங்குகளில் கூட்டம் இல்லை - தள்ளிப்போகும் ஐஸ்வர்யா முருகன் பட வெளியீடு!
ஐஸ்வர்யா முருகன்
ஐஸ்வர்யா முருகன் திரைப்படத்தை ஆர். பன்னீர்செல்வம் இயக்கியிருந்தார். இவர் ரேனிகுண்டா, கருப்பன் படங்களை இயக்கியவர். சாதி ஆணவக் கொலையை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகியுள்ளது.
நேற்று வெளியான திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் இல்லாத காரணத்தால் வரும் 11ஆம் தேதி வெளியாவதாக இருந்த ஐஸ்வர்யா முருகன் திரைப்படத்தை தள்ளி வைத்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சினிமா வர்த்தகம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒடிடி தளங்களின் விஸ்வரூபம் திரையரங்கு வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே ரசிகர்களை திரையரங்குக்கு அழைக்கும் சக்தி வாய்ந்தவையாக உள்ளன. இரண்டாம் கட்ட நடிகர்களின் திரைப்படங்களுக்கே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை.
நேற்று விஷால் நடித்த வீரமே வாகை சூடும் திரைப்படம் வெளியானது. அவர் இதற்கு முன் நடித்த ஆக்சன் படங்களின் சாயலில் இந்தப் படமும் தயாராகி உள்ளது. திரைக்கதையில் சிறிதளவு சுவாரசியம் இருந்தாலும் இந்தப் படத்திற்கு பி, சி சென்டர்களில் கூட்டம் இல்லை. பல திரையரங்குகளில் 20 பார்வையாளர்கள் கூட வரவில்லை என விநியோகஸ்தர் தரப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த வாரம் வெளியாக இருந்த ஐஸ்வர்யா முருகன் திரைப்படத்தை தள்ளி வைக்கும்படி விநியோகிஸ்தர்கள் தயாரிப்பாளரை கேட்டுள்ளனர். இதனால் ஐஸ்வர்யா முருகன் திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பது என முடிவு செய்திருக்கிறார்கள். நாளை நடப்பதாக இருந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் ரத்து செய்திருக்கிறது படக்குழு.
ஐஸ்வர்யா முருகன் திரைப்படத்தை ஆர். பன்னீர்செல்வம் இயக்கியிருந்தார். இவர் ரேனிகுண்டா, கருப்பன் படங்களை இயக்கியவர். சாதி ஆணவக் கொலையை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகியுள்ளது.
ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும் பிரபல இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் யாரேனும் ஒருவர் இன்று தேவைப்படுகிறார். அப்படி இல்லாத திரைப்படங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை என்பதையே ஐஸ்வர்யா முருகன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.