Home /News /entertainment /

30 மொழிகளில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் வெப் சீரிஸ்!!

30 மொழிகளில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் வெப் சீரிஸ்!!

சுழல் வெப் சீரிஸ் போஸ்டர்

சுழல் வெப் சீரிஸ் போஸ்டர்

Suzhal Web Series : இதுவரை வெளியான தமிழ் இணையத் தொடர்கள் அதிக மொழிகளில் வெளியானதில்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சூழல் என்ற தமிழ் இணையத் தொடர் முதல் முறையாக 30 மொழிகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கதை உருவாக்கத்தில் இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அரவிந்த் இயக்கியுள்ள இணைய தொடருக்கு சுழல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஆர்.பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த தொடருக்கான அறிமுக விழா கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற்றது.

Also read... 'நாயகன் மீண்டும் வர்றார்!' - கமல் ஹாசனின் நடிப்பில் நாம் கொண்டாடிய ஆக்ஷன் படங்கள்! 

ஆனால் சுழல் இணையத் தொடர் எத்தனை மொழிகளில் வெளியாகிறது? எந்த தேதியில் வெளியாகிறது என்பதை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது  சூழல் இணையத் தொடர் ஜூன் 17ஆம் தேதி 30 மொழிகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.







இதுவரை வெளியான தமிழ் இணையத் தொடர்கள் அதிக மொழிகளில் வெளியானதில்லை. முதன் முறையாக சுழல் இணைய தொடர் முதன்முறையாக 30 இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் வெளியாகிறது.  இதனால் அந்த வெப் சீரிஸ் குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Also read... கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை 

விக்ரம் வேதா படத்தை இயக்கிய இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி ஆகியோர் இந்த வெப்சீரிஸிற்கு கதை எழுதியிருப்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Aishwarya rajesh

அடுத்த செய்தி