Vaathi Coming: ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு தாறுமாறு நடனமாடிய விஜய் பட ஹீரோயின்!

வாத்தி கம்மிங்

வாத்தி கம்மிங் பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடியிருக்கும் நடிகை இஷா கோபிகர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    வாத்தி கம்மிங் பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடியிருக்கும் நடிகை இஷா கோபிகர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

    AR Rahman: தொகுப்பாளினியின் இந்தி பேச்சால் மேடையை விட்டு இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

    பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனைப் படைத்த மாஸ்டர் படத்தில் 'குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். அதிலும் விஜய்யுடன் நடித்த ஷில்பா ஷெட்டி, ஜெனிலியா, வரலட்சுமி உள்ளிட்டோர் அந்தப் பாடலுக்கு நடனமாடியிருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொண்டனர்.



    இந்தப் பட்டியலில் தற்போது விஜய்யின் இன்னொரு ஹீரோயினும் இணைந்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, ’நெஞ்சினிலே’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இஷா கோபிகர் தான்! என் சுவாச காற்றே, நரசிம்மா ஆகியப் படங்களில் நடித்த இஷா கோபிகர், பின்னர் இந்தி படங்களில் மட்டும் நடித்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவர் ஆடிய நடனத்தை தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை குறிப்பிட்டு வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: