முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Ilayaraja: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இசைஞானி இளையராஜா!

Ilayaraja: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இசைஞானி இளையராஜா!

இளையராஜா - முதல்வர் மு.க.ஸ்டாலின்

இளையராஜா - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தன்னை வாழ்த்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார்.

அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்சி செய்து வரும் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, 5 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். தற்போது 79 வயதாகும் இளையராஜாவுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. அதன் பின் 2018-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது நியமன எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்!” என்று தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

மாநிலங்களவை உறுப்பினராகும் இளையராஜாவுக்கு நடிகர் சரத்குமார் வாழ்த்து!

தற்போது அவருக்கு தன் நன் நன்றியை தெரிவிக்கும் பொருட்டு, “தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச்செய்திக்கு என் மனமார்ந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார் இளையராஜா.

First published:

Tags: CM MK Stalin, Ilaiyaraja, Ilayaraja, MK Stalin